ain4:

Oct. 12th, 2017 01:55 am
1. மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர் அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும் அவ் வரை இறக்குவை யாயின் மை வரை நாட! வருந்துவள் பெரிதே. 2. அரும் பெருள் செய் வினை தப்பற்கும் உரித்தே பெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள் செல்லாய் அயினோ நன்றே மெல்லம் புலம்ப இவள் அழப் பிரிந்தே. 3. புதுக் கலத்து அன்ன கனிய ஆலம் போகில் தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம் தண்ணிய இனியவாக எம்மொடுஞ் சென்மோ விடலை நீயே. 4. கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய ஆன் நீர்ப் பத்தல் யானை வெளவும் கல் அதர்க் கவலை செல்லின் மெல்லியல் புயல் நெடுங் கூந்தல் புலம்பும் வயமான் தோன்றல் வல்லா தீமே. 5. களிறு பிடி தழீஇப் பிற புலம் படராது பசி தின வருந்தும் பைது அறு குன்றத்துச் சுடர் தொடிக் குறு மகள் இனைய எனைப் பயன் செய்யுமோ விடலை நின் செலவே. 6. வெல் போர்க் குரிசில் நீ வியன் சுரம் இறப்பின் பல் காழ் அல்குல் அவ்வரி வாடக் குழலினும் இனைகுவள் பெரிதே விழவு ஒலி கூந்தல் மாஅயோளே. 7. ஞெலி கழை முழங்கு அழல் வயமா வெரூஉம் குன்று உடை அருஞ்சுரம் செல அயர்ந்தனையே நன்று இல் கொண்க நின் பொருளே பாவை யன்ன நின் துணை பிரிந்து வருமே. 8. பல் இருங்கூந்தல் மெல்லியலோள் வயின் பிரியாய் ஆயினும் நன்றே விரி இணர்க் கால் எறுழ் ஒள் வீ தாஅய முருகு அமர் மா மலை பிரிந்தெனப் பிரிமே. 9. வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து செலவு அயர்ந்தனையால் நீயே நன்று நின் நயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன் முறுவல் காண்டலின் இனிதோ இறு வரை நாட நீ இறந்து செய் பொருளே. 10. பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் இலங்கு வளை மெல் தோள் இழை நிலை நெகிழப் பிரிதல் வல்லுவை ஆயின் அரிதே விடலை இவள் ஆய் நுதல் கவினே. 1. வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் ஆர் இடைச் செல்வோர் ஆறு நனி வெரூஉம் காடு இறந்தனரே காதலர் நீடுவர் கொல் என நினையும் என் நெஞ்சே. 2. அறம் சாலியரோ அறம் சாலியரோ வறன் உண்டாயினும் அறம் சாலியரோ வாள் வனப்பு உற்ற அருவிக் கோள் வல் என் ஐயை மறைத்த குன்றே. 3. தெறுவது அம்ம நும் மகள் விருப்பே உறு துயர் அவலமொடு உயிர் செலச் சாஅய்ப் பாழ் படு நெஞ்சம் படர் அடக் கலங்க நாடு இடை விலங்கிய வைப்பின் காடு இறந்தனள் நம் காதலோளே. 4. அவிர் தொடி கொட்பக் கழுது புகவு அயரக் கருங்கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவச் சிறு கண் யானை ஆள் வீழ்துத் திரிதரும் நீளிடை அருஞ்சுரம் என்ப நம் தோளிடை முனிநர் சென்ற ஆறே. 5. பாயல் கொண்ட பனி மலர் நெடுங்கண் பூசல் கேளார் சேயர் என்ப இழை நெகிழ் செல்லல் உறீஇக் கழை முதிர் சோலைக் காடு இறந்தோரே. 6. பொன் செய் பாண்டில் பொலங்கலம் நந்தத் தேர் அகல் அல்குல் அவ்வரி வாட இறந்தோர் மன்ற தாமே பிறங்கு மலைப் புல் அரை ஓமை நீடிய புலி வழங்கு அதர கானத்தானே. 7. சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப் பைது அற வெந்த பாலை வெங்காட்டு அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச் சென்ற நெஞ்சம் நீடிய பொருளே. 8. ஆய் நலம் பசப்ப அரும் படர் நலிய வேய் மருள் பணைத்தோள் வில் இழை நெகிழ நசை நனி கொன்றோர் மன்ற இசை நிமிர்ந்து ஓடு எரி நடந்த வைப்பின் கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. 9. கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின் மண் புரை பெருகிய மரம் முளி கானம் இறந்தனரோ நம் காதலர் மறந்தனரோ தில் மறவா நம்மே. 20. முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ முழங்கு அழல் அசை வளி எடுப்ப வானத்து உருமுப்படு கனலின் இரு நிலத்து உறைக்கும் கவலை அருஞ்சுரம் போயினர் தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே. 1. உலறு தலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறிப் புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து மொழி பெயர் பன் மலை இறப்பினும் ஒழிதல் செல்லாது ஒண் தொடி குணனே. 2. நெடுங் கழை முளிய வேனில் நீடிக் கடுங்கதிர் ஞாயிறு கல் பகத் தெறுதலின் வெய்ய வாயின முன்னே இனியே ஒண்ணுதல் அரிவையை உள்ளு தொறும் தண்ணிய வாயின சுரத்திடை ஆறே. 3. வள் எயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக் கள்ளியங் கடத்தினைக் கேழல் பார்க்கும் வெஞ்சுரக் கவலை நீந்தி வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே. 4. எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடைச் சிறிது கண்படுப்பினும் காண்குவென் மன்ற நள்ளென் கங்குல் நளி மனை நெடு நகர் வேங்கை வென்ற சுணங்கின் தேம் பாய் கூந்தல் மாஅயோளே. 5. வேனில் அரையத்து இலை யொலி வெரீஇப் போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும் வெம்பலை அருஞ்சுரம் நலியாது எம் வெம் காதலி பண்பு துணைப் பெற்றே. 6. அழல் அவிர் நனந்தலை நிழலிடம் பெறாது மட மான் அம் பிணை மறியொடு திரங்க நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின் இன்னா மன்ற சுரமே இனிய மறையான் ஒழிந்தோள் பண்பே. 7. பொறி வரித் தடக்கை வேதல் அஞ்சிச் சிறு கண் யானை நிலந் தொடல் செல்லா வெயில் முளி சோலைய வேய் உயர் சுரனே அன்ன ஆர் இடை யானும் தண்மை செய்த இத் தகையோள் பண்பே. 8. நுண் மழை தளித்தென நறு மலர் தாஅய்த் தண்ணியவாயினும் வெய்ய மன்ற மடவரல் இன் துணை ஒழியக் கட முதிர் சோலைய காடு இறந்தேற்கே. 9. ஆள் வழக்கு அற்ற பாழ் படு நனந்தலை வெம்முனை அருஞ்சுரம் நீந்தி நம்மொடு மறு தருவது கொல் தானே செறி தொடி கழித்து உகு நிலையவாக ஒழிந்தோள் கொண்ட என் உரம் கெழு நெஞ்சே. 30. வெந்துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி வந்தனம் ஆயினும் ஒழிக இனிச் செலவே அழுத கண்ணள் ஆய் நலம் சிதையக் கதிர் தெறு வெஞ்சுரம் நினைக்கும் அவிர் கோல் ஆய் தொடி உள்ளத்துப் படரே. 1. அம்ம வாழி தோழி அவிழ் இணர்க் கருங்கால் மராஅத்து வைகு சினை வான் பூ அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள இனிய கமழும் வெற்பின் இன்னா என்ப அவர் சென்ற ஆறே. 2. அம்ம வாழி தோழி என்னதூஉம் அறன் இல மன்ற தாமே விறல் மிசைக் குன்று கெழு கானத்த பண்பில் மாக்கணம் கொடிதே காதலிப் பிரிதல் செல்லல் ஐய என்னாதவ்வே. 3. அம்ம வாழி தோழி யாவதும் வல்லா கொல்லோ தாமே அவண கல் உடை நன் நாட்டுப் புள்ளினப் பெருந்தோடு யாஅம் துணை புணர்ந்து உறைதும் யாங்குப் பிரிந்து உறைதி என்னாது அவ்வே. 4. அம்ம வாழி தோழி சிறி இலை நெல்லி நீடிய கல் காய் கடத்திடைப் பேதை நெஞ்சம் பின் செலச் சென்றோர் கல்லினும் வலியர் மன்ற பல் இதழ் உண்கண் அழப் பிரிந்தோரே. 5. அம்ம வாழி தோழி நம் வயின் நெய்தோர் அன்ன செவிய எருவை கல் புடை மருங்கில் கடு முடை பார்க்கும் காடு நனி கடிய என்ப நீடி இவண் வருநர் சென்ற ஆறே. 6. அம்ம வாழி தோழி நம் வயின் பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற நின்றது இல் பொருள் பிணி முற்றிய என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே. 7. அம்ம வாழி தோழி நம் வயின் மெய்யுற விரும்பிய கை கவர் முயக்கினும் இனிய மன்ற தாமே பனி இருங்குன்றம் சென்றோர்க்குப் பொருளே. 8. அம்ம வாழி தோழி சாரல் இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம் மலையுறு தீயில் சுர முதல் தோன்றும் பிரிவருங் காலையும் பிரிதல் அரிது வல்லுநர் நம் காதலோரே. 9. அம்ம வாழி தோழி சிறியிலைக் குறுஞ்சினை வேம்பின் நறும் பழம் உணீஇய வாவல் உகக்கும் மாலையும் இன்று கொல் காதலவர் சென்ற நாடே. 40. அம்ம வாழி தோழி காதலர் உள்ளார் கொல் நாம் மருள் உற்றனம் கொல் விட்டுச் சென்றனர் நம்மே தட்டைத் தீயின் ஊர் அலர் எழவே. 1. அவரோ வாரார் தான் வந்தன்றே குயில் பெடை இன் குரல் அகவ அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே. 2. அவரோ வாரார் தான் வந்தன்றே சுரும்பு களித்து ஆலும் இருஞ்சினைக் கருங்கால் நுணவம் கமழும் பொழுதே. 3. அவரோ வாரார் தான் வந்தன்றே திணி நிலைக் கோங்கம் பயந்த அணி மிகு கொழு முகை உடையும் பொழுதே. 4. அவரோ வாரார் தான் வந்தன்றே நறும் பூங்குரவம் பயந்த செய்யாப் பாவை கொய்யும் பொழுதே. 5. அவரோ வாரார் தான் வந்தன்றே புதுப் பூ அதிரல் தாஅய்க் கதுப்பு அறல் அணியும் காமர் பொழுதே. 6. அவரோ வாரார் தான் வந்தன்றே அஞ்சினைப் பாதிரி அலர்ந்தெனச் செங்கண் இருங்குயில் அறையும் பொழுதே. 7. அவரோ வாரார் தான் வந்தன்றே எழில் தகை இள முலை பொலியப் பொரிப்பூம் புன்கின் முறி திமிர் பொழுதே. 8. அவரோ வாரார் தான் வந்தன்றே வலஞ்சுரி மராஅம் வேய்ந்து நம் மணங்கமழ் தண் பொழில் மலரும் பொழுதே. 9. அவரோ வாரார் தான் வந்தன்றே பொரி கால் மாஞ்சினை புதைய எரி கால் இளந்தளிர் ஈனும் பொழுதே. 50. அவரோ வாரார் தான் வந்தன்றே வேம்பின் ஒண் பூ உறப்பத் தேம் படு கிளவி அவர்த் தெளிக்கும் பொழுதே. 1. அத்த பலவின் வெயில் தின் சிறு காய் அருஞ்சுரம் செல்வோர் அருந்தினர் கழியும் காடு பின் ஒழிய வந்தனர் தீர்க இனிப் பல் இதழ் உண்கண் மடந்தை நின் நல் எழில் அல்குல் வாடிய நிலையே. 2. விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர் எழுத்துடை நடுகல் அன்ன விழுப்பிணர்ப் பெருங்கை யானை இருஞ்சினம் உறைக்கும் வெஞ்சுரம் அரிய என்னார் வந்தனர் தோழி நம் காதலோரே. 3. எரிக்கொடி கவைஇய செவ்வரை போலச் சுடர்ப்பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம் நீ இனிது முயங்க வந்தனர் மா இருஞ் சோலை மலை இறந்தோரே. 4. ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும் அரிய சுரன் வந்தனரே தெரி இழை அரிவை நின் பண்பு தர விரைந்தே. 5. திருந்து இழை அரிவை நின் நலம் உள்ளி அருஞ் செயல் பொருட் பிணி பெருந்திரு உறுக எனச் சொல்லாது பெயர் தந்தேனே பல் பொறிச் சிறு கண் யானை திரிதரும் நெறி விலங்கு அதர கானத்தானே. 6. உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர் யானை பிணித்த பொன் புனை கயிற்றின் ஒள் எரி மேய்ந்த சுரத்திடை உள்ளம் வாங்கத் தந்த நின் குணனே. 7. குரவம் மலர மரவம் பூப்பச் சுரன் அணி கொண்ட கானம் காணூஉ அழுங்குக செய்பொருள் செலவு என விரும்பி நின் நலம் கலிழ் மாமை கவின வந்தனர் தோழி நம் காதலோரே. 8. கோடு உயர் பன் மலை இறந்தனர் ஆயினும் நீட விடுமோ மற்றே நீடு நினைந்து துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே. 9. அரும் பொருள் வேட்கைய மாகி நின் துறந்து பெருங்கல் அதரிடைப் பிரிந்த காலைத் தவ நனி நெடிய ஆயின இனியே அணி இழை உள்ளியாம் வருதலின் அணிய ஆயின சுரத்திடை ஆறே. 60. எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீளிடை அரிய வாயினும் எளிய அன்றே அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பிக் கடுமான் திண் தேர் கடைஇ நெடுமான் நோக்கி நின் உள்ளி யாம் வரவே. 1. உயர் கரைக் கான் யாற்று அவிர் மணல் அகன் துறை வேனில் பாதிரி விரி மலர் குவைஇத் தொடலை தை இய மடவரல் மகளே கண்ணினும் கதவ நின் முலையே முலையினும் கதவ நின் தட மென் தோளே. 2. பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங்கவலைச் சிறு கண் யானை உறு பகை நினையாது யாங்கு வந்தனையோ பூந்தார் மார்ப அருள் புரி நெஞ்சம் உய்த்தர இருள் பொர நின்ற இரவினானே. 3. சிலை வில் பகழிச் செந் துவர் ஆடை கொலை வல் எயினர் தங்கை  நின் முலைய சுணங்கு என நினைதி நீயே அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சே. 4. முளமா வல்சி எயினர் தங்கை இளமா எயிற்றிக்கும் இந்நிலை அறியச் சொல்லினென் இரக்கும் அளவை வெள் வேல் விடலை விரையாதீமே. 5. கண மா தொலைச்சித் தன் ஐயர் தந்த நிண ஊன் வல்சிப் படு புள் ஒப்பும் நல மாண் எயிற்றி போலப் பல மிகு நல் நலம் நயவர உடையை என் நோற்றனையோ மாவின் தளிரே. 6. அன்னாய் வாழி வேண்டன்னை தோழி பசந்தனள் பெரிது எனச் சிவந்த கண்ணை கொன்னே கடவுதி ஆயின் என்னதூஉம் அறிய ஆகுமோ மற்றே முறி இணர்க் கோங்கம் பயந்த மாறே. 7. பொரி அரைக் கோங்கின் பொன் மருள் பசு வீ விரி இணர் வேங்கையொடு வேறுபட மிலைச்சி விரிவு மலர் அணிந்த வேனில் கான் ஆற்றுத் தேரொடு குறுக வந்தோன் பேரொடு புணர்ந்தன்று அன்னை இவள் உயிரே. 8. எரிப்பூ இலவத்து ஊழ் கழி பன் பலர் பொரிப்பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும் தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி எம்மொடு கொண்மோ பெரும நின் எம் மெல் ஓதி அழிவிலள் எனினே. 9. வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில் முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல் குறி நீ செய்தனை என்ப அலரே குரவ நீள் சினை உறையும் பருவ மாக்குயில் கௌவையின் பெரிதே. 70. வண் சினைக் கோங்கின் தண் கமழ் படலை இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப நீ நயந்து உறைப்பட்டோள் யாவளோ எம் மறையா தீமே. 1. மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் உயர் நெடுங் குன்றம் படு மழை தலைஇச் சுர நனி இனியவாகுக தில்ல அற நெறி இதுவெனத் தெளிந்த என் பிறை நுதல் குறுமகள் போகிய சுரனே. 2. என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை நெஞ்சு உணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு அழுங்கல் மூதூர் அலர் எழச் செழும் பல் குன்றம் இறந்த என் மகளே. 3. நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக புலிக் கோள் பிழைத்த கவைக் கோட்டு முது கலை மான் பிணை அணை தர ஆண் குரல் விளிக்கும் வெஞ்சுரம் என் மகள் உய்த்த அம்பு அமை வல்வில் விடலை தாயே. 4. பல் ஊழ் நினைப்பினும் நல்லென்று ஊழ மீளி முன்பின் காளை காப்ப முடி அகம் புகாக் கூந்தலள் கடுவனும் அறியாக் காடு இறந்தோளே. 5. இது என் பாவை பாவை இது என் அலமரு நோக்கின் நலம்வரு சுடர் நுதல் பைங்கிளி எடுத்த பைங்கிளி என்றிவை காண்தொறும் காண்தொறும் கலங்க நீங்கினளோ என் பூங்கணோளே. 6. நாள் தொறும் கலிழும் என்னினும் இடை நின்று காடு படு தீயின் கனலியர் மாதோ நல் வினை நெடு நகர் கல்லெனக் கலங்கப் பூப் புரை உண்கண் மடவரல் போக்கிய புணர்த்த அறன் இல் பாலே. 7. நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் சென்றனள் மன்ற என் மகளே பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே. 8. செல்லிய முயலிப் பாஅய சிறகர் வாவல் உகக்கும் மாலையாம் புலம்பப் போகிய அவட்கோ நோவேன் தேமொழித் துணையிலள் கலிழும் நெஞ்சின் இணையேர் உண்கண் இவட்கு நோவதுமே. 9. தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின் இனிது ஆம் கொல்லோ தனக்கே பனி வரை இனக் களிறு வழங்கும் சோலை வயக்குறு வெள் வேல் அவர் புணர்ந்து செலவே? 80. அத்தம் நீள் இடை அவனொடு போகிய முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல் தாயர் என்னும் பெயரே வல்லாறு எடுத்தேன் மன்ற யானே கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே. 1. பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து செங்கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர் யார் கொல் அளியர் தாமே வார் சிறைக் குறுங்கால் மகன்றில் அன்ன உடன் புணர் கொள்கைக் காதலோரே. 2. புள் ஒலிக்கு அமர்த்த கண்ணன் வெள் வேல் திருந்து கழல் காளையொடு அருஞ்சுரம் கழிவோள் எல் இடை அசைந்த கல்லென் சீறூர்ப் புனை இழை மகளிர்ப் பயந்த மனை கெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே. 3. கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற மள்ளன் உள்ளம் மகிழ்கூர்ந்தன்றே பஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும் அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே. 4. சேண்புலம் முன்னிய அசைநடை அந்தணிர் நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர் யாய் நயந்து எடுத்த ஆய் நலம் கவின ஆரிடை இறந்தனள் என்மின் நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே. 5. கடுங்கண் காளையொடு நெடுந்தேர் ஏறிக் கோள் வல் வேங்கை மலை பிறக்கொழிய வேறு பல் அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக் கூறுமின் வாழியோ ஆறு செல் மாக்கள் நல் தோள் நயந்து பாராட்டி எற் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே. 6. புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம் நயந்த காதலற் புணர்ந்து சென்றனளே நெடுஞ் சுவர் நல் இல் மருண்ட இடும்பை உறவி நின் கடுஞ்சூல் மகளே. 7. அறம் புரி அருமறை நவின்ற நாவில் திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று ஒண் தொடி வினவும் பேதையம் பெண்டே கண்டனெம் அம்ம சுரத்திடை அவளை இன்துணை இனிது பாராட்டக் குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே. 8. நெருப்பு அவிர் கனலி உருப்பு சினம் தணியக் கருங்கால் யாத்து வரி நிழல் இரீஇச் சிறு வரை இறப்பின் காண்குவை செறி தொடிப் பொன் ஏர் மேனி மடந்தையொடு வென் வேல் விடலை முன்னிய சுரனே. 9. செய்வினை பொலிந்த செறி கழல் நோன்தாள் மை அணல் காளையொடு பைய இயலிப் பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை சென்றனள் என்றிர் ஐய ஒன்றினவோ அவள் அம் சிலம்பு அடியே. 90. நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது பல் ஊழ் மருகி வினவுவோயே திண் தோள் வல் வில் காளையொடு கண்டனெம் மன்ற சுரத்து இடை யாமே. 1. மறு இல் தூவிச் சிறு கருங்காக்கை அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ வெம் சின விறல் வேல் காளையொடு அம் சில் ஓதியை வரக் கரைந்தீமே. 2. வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கிப் பரியல் வாழி தோழி பரியின் எல்லை இல் இடும்பை தரூஉம் நல் வரை நாடனொடு வந்த மாறே. 3. துறந்ததன் கொண்டு துயர் அடச் சாஅய் அறம் புலந்து பழிக்கும் அம் கண் ஆட்டி எவ்வ நெஞ்சிற்கு ஏம மாக வந்தனளோ நின் மகளே வெந்திறல் வெள்வேல் விடலை முந்துறவே. 4. மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற வெஞ்சுரம் இறந்த அம் சில் ஓதிப் பெரு மட மான் பிணை அலைத்த சிறு நுதல் குறுமகள் காட்டிய வம்மே. 5. முளி வயிர்ப் பிறந்த வளி வளர் கூர் எரிச் சுடர்விடு நெடுங்கொடி விடர் குகை முழங்கும் இன்னா அருஞ்சுரம் தீர்ந்தனம் மென் மெல ஏகுமதி வாழியோ குறுமகள் போது கலந்து கறங்கு இசை அருவி வீழும் பிறங்கு இருஞ் சோலை நம் மலை கெழு நாட்டே. 6. புலிப் பொறி வேங்கைப் பொன் இணர் கொய்து நின் கதுப்பு அயல் அணியும் அளவை பைபயச் சுரத்திடை அயர்ச்சியை ஆறுக மடந்தை கல் கெழு சிறப்பின் நம்மூர் எல் விருந்தாகிப் புகுகம் நாமே. 7. கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியும் சுரன்அணி வாரா நின்றனள் என்பது முன்னுற விரைந்த நீர் உரைமின் இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே. 8. புள்ளும் அறியாப் பல் பழம் பழுனி மடமான் அறியாத் தட நீர் நிலைஇச் சுர நனி இனிய வாகுக என்று நினைத்தொறும் கலிழும் என்னினும் மிகப் பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே. 9. நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும் எம் மனை வதுவை நன் மணம் கழிகெனச் சொல்லின் எவனோ மற்றே வென்வேல் மை அற விளங்கிய கழல் அடிப் பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே? 400. மள்ளர் அன்ன மரவம் தழீஇ மகளிர் அன்ன ஆடு கொடி நுடக்கும் அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில் காதல் புணர்ந்தனள் ஆகி ஆய் கழல் வெஞ்சின விறல் வேல் காளையோடு இன்று புகு தருமென வந்தன்று தூதே. ****

ain3:

Oct. 12th, 2017 01:52 am
1. அன்னாய் வாழி வேண்டு அன்னை என் ஐ தானும் மலைந்தான் எமக்கும் தழை ஆயின பொன் வீ மணி அரும்பினவே என்ன மரம் கொல் அவர் சாரல் அவ்வே. 2. அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் ஊர்ப் பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும் குடுமித் தலைய மன்ற நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே. 3. அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு உவலை கூவல் கீழ மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே. 4. அன்னாய் வாழி வேண்டு அன்னை அஃது எவன் கொல் வரையர மகளிரின் நிரையுடன் குழீஇப் பெயர் வுழிப் பெயர் வுழித் தவிராது நோக்கி நல்லள் நல்லள் என்ப தீயேன் தில்ல மலை கிழவோர்க்கே. 5. அன்னாய் வாழி வேண்டு அன்னை என் தோழி நனி நாண் உடையள் நின்னும் அஞ்சும் ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் மலர்ந்த மார்பின் பாயல் துஞ்சிய வெய்யள் நோகோ யானே. 6. அன்னாய் வாழி வேண்டு அன்னை உவக்காண் மாரிக் குன்றத்துக் காப்பான் அன்னன் தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள் பாசி சூழ்ந்த பெருங்கழல் தண் பனி வைகிய வரிக் கச்சினனே. 7. அன்னாய் வாழி வேண்டு அன்னை நன்றும் உணங்கல கொல்லோ நின் தினையே உவக்காண் நிணம் பொதி வழுக்கின் தோன்றும் மழைதலை வைத்து அவர் மணி நெடுங்குன்றே. 8. அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர் கிழங்கு அகழ் நெடுங்குழி மல்க வேங்கைப் பொன் மலி புது வீத் தாஅம் அவர் நாட்டு மணி நிற மால் வரை மறைதொறு இவள் அணி மலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே. 9. அன்னாய் வாழி வேண்டு அன்னை நீ மற்று யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின் கொண்டல் அவரைப் பூவின் அன்ன வெண் தலை மா மழை சூடித் தோன்றல் ஆனாது அவர் மணி நெடுங்குன்றே. 10. அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை புலவுச் சேர் துறுகல் ஏறி அவர் நாட்டுப் பூக் கெழு குன்றம் நோக்கி நின்று மணி புரை வயங்கிழை நிலைபெறத் தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயே. 1. நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன வயலையஞ் சிலம்பின் தலையது செயலையம் பகைத்தழை வாடும் அன்னாய். 2. சாத்த மரத்த பூழில் எழு புகை கூட்டு விரை கமழும் நாடன் அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய். 3. நறு வடி மாஅத்து மூக்கிறுபு உதிர்த்த ஈர்ந்தண் பெரு வடுப் பாலையில் குறவர் உறை வீழ் ஆலியின் தொகுக்கும் சாரல் மீ மிசை நன்னாட்டவர் வரின் யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய். 4. சாரல் பலவின் கொழுந்துணர் நறும் பழம் இருங்கல் விடர் அளை வீழ்ந்தென வெற்பில் பெருந்தேன் இறாஅல் கீறும் நாடன் பேர் அமர் மழைக் கண் கலிழத் தன் சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய். 5. கட்டளை அன்ன மணி நிறத் தும்பி இட்டிய குயின்ற துறைவயின் செலீஇயர் தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர் தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும் புதல் மலர் மாலையும் பிரிவோர் இதனினும் கொடிய செய்குவர் அன்னாய். 6. குறுங்கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை நெடும் புதல் கானத்து மடப் பிடி ஈன்ற நடுங்கு நடைக் குழவி கொளீஇய பலவின் பழந்தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்குக் கொய்திடு தளிரின் வாடி நின் மெய் பிறிதாதல் எவன் கொல் அன்னாய். 7. பெரு வரை வேங்கைப் பொன் மருள் நறு வீ மான் இனப் பெருங்கிளை மேயல் ஆரும் கானக நாடன் வரவும் இவள் மேனி பசப்பது எவன் கொல் அன்னாய். 8. நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும் மயிர் வார் முன் கை வளையும் செறூஉம் களிறு கோள் பிழைத்த கதஞ்சிறந்து எழு புலி எழுதரு மழையின் குழுமும் பெருங்கல் நாடன் வருங்கொல் அன்னாய். 9. கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள் வீ இருங்கல் வியல் அறை வரிப்பத் தாஅம் நன் மலை நாடன் பிரிந்தென ஒண்ணுதல் பசப்பது எவன் கொல் அன்னாய். 20. அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன் பெரு வரை அன்ன திரு விறல் வியன் மார்பு முயங்காது கழிந்த நாள் இவள் மயங்கிதழ் மழைக் கண் கலிழும் அன்னாய். 1. அம்ம வாழி தோழி காதலர் பாவை அன்ன என் ஆய் கவின் தொலைய நன் மா மேனி பசப்பச் செல்வல் என்ப தம் மலை கெழு நாடே. 2. அம்ம வாழி தோழி நம் ஊர் நனிந்து வந்து உறையும் நறும் தண் மார்பன் இன் இனி வாரா மாறு கொல் சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே. 3. அம்ம வாழி தோழி நம் மலை வரை ஆம் இழியக் கோடல் நீடக் காதலர்ப் பிரிந்தோர் கையற நலியும் தண் பனி வடந்தை அச்சிரம் முந்து வந்தனர் நம் காதலோரே. 4. அம்ம வாழி தோழி நம் மலை மணி நிறங் கொண்ட மா மலை வெற்பில் துணி நீர் அருவி நம்மோடு ஆடல் எளிய மன்னால் அவர்க்கு இனி அரிய ஆகுதல் மருண்டனென் யானே. 5. அம்ம வாழி தோழி பைஞ்சுனைப் பாசடை நிவந்த பனி மலர்க் குவளை உள் அகம் கமழும் கூந்தல் மெல்லியல் ஏர் திகழ் ஒண்ணுதல் பசத்தல் ஓரார் கொல் நம் காதலோரே. 6. அம்ம வாழி தோழி நம் மலை நறும் தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள் கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புற மாறி நின் வன்புடை விறல் கவின் கொண்ட அன்பிலாளன் வந்தனன் இனியே. 7. அம்ம வாழி தோழி நாளும் நல் நுதல் பசப்பவும் நறுந் தோள் ஞெகிழவும் ஆற்றலம் யாம் என மதிப்பக் கூறி நப்பிரிந்து உறைந்தோர் மன்ற நீ விட்டனையோ அவர் உற்ற சூளே. 8. அம்ம வாழி தோழி நம்மூர் நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன் இரந்து குறையுறாஅன் பெயரின் என் ஆவது கொல் நம் இன் உயிர் நிலையே. 9. அம்ம வாழி தோழி நாம் அழப் பன்னாள் பிரிந்த அறன் இலாளன் வந்தனனோ மற்று இரவில் பொன் போல் விறல் கவின் கொள்ளும் நின் நுதலே. 30. அம்ம வாழி தோழி நம்மொடு சிறு தினைக் காவலன் ஆகிப் பெரிது நின் மெல் தோள் நெகிழவும் திரு நுதல் பசப்பவும் பொன் போல் விறல் கவின் தொலைத்த குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே. 1. யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப இரும் பல் கூந்தல் திருந்திழை அரிவை திதலை மாமை தேயப் பசலை பாயப் பிரிவு தெய்யோ. 2. போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க ஏதிலாட்டியை நீ பிரிந்ததற்கே அழல் அவிர் மணிப் பூண் நனையப் பெயல் ஆனா என் கண்ணே தெய்யோ. 3. வருவை அல்லை வாடை நனி கொடிதே அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றி ஒல்லென இழிதரும் அருவி நின் கல் உடை நாட்டுச் செல்லல் தெய்யோ. 4. மின் அவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய் நன் நுதல் பசத்தல் யாவது துன்னிக் கனவில் காணும் இவளே நனவில் காணாள் நின் மார்பே தெய்யோ. 5. கையுற வீழ்ந்த மை இல் வானமொடு அரிது காதலர்ப் பொழுதே அதனால் தெரி இழை தெளிர்ப்ப முயங்கிப் பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ. 6. அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று நன் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும் இன்னா வாடையும் மலையும் நும் ஊர்ச் செல்கம் எழுகமோ தெய்யோ. 7. காமம் கடவ உள்ளம் இனைப்ப யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின் ஓங்கித் தோன்றும் உயர் வரைக்கு யாங்கு எனப்படுவது நும்மூர் தெய்யோ. 8. வார்க்கோட்டு வயத் தகர் வாராது மாறினும் குரூஉ மயிர்ப் புருவை நசையின் அல்கும் மாஅல் அருவித் தண் பெருஞ் சிலம்ப நீ இவன் வரூஉம் காலை மேவரும் மாதோ இவள் நலனே தெய்யோ. 9. சுரும்பு உணக் களித்த புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம் நின் குன்று கெழு நன்னாட்டுச் சென்ற பின்றை நேர் இறைப் பணைத்தோள் ஞெகிழ வாராயாயின் வாழேம் தெய்யோ. 40. அறியேம் அல்லேம் அறிந்தனம் மாதோ பொறி வரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச் சாந்தம் நாறும் நறியோள் கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ. 1. நம் உறு துயரம் நோக்கி அன்னை வேலன் தந்தாள் ஆயின் அவ் வேலன் வெறி கமழ் நாடன் கேண்மை அறியுமோ தில்ல செறி எயிற்றோயே. 2. அறியாமையின் வெறியென மயங்கி அன்னையும் அருந்துயர் உழந்தனள் அதனால் எய்யாது விடுதலோ கொடிதே நிரை இதழ் ஆய் மலர் உண்கண் பசப்பச் சேய் மலை நாடன் செய்த நோயே. 3. கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி அறியா வேலன் வெறி எனக் கூறும் அது மனம் கொள்குவை அனையிவள் புது மலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே. 4. அம்ம வாழி தோழி பன் மலர் நறும் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை குன்றம் பாடான் ஆயின் என் பயஞ் செய்யுமோ வேலற்கு அவ் வெறியே. 5. பொய்யா மரபின் ஊர் முது வேலன் கழங்கு மெய்ப் படுத்துக் கன்னம் தூக்கி முருகு என மொழியும் ஆயின் கெழுதகை கொல் இவள் அணங்கியோற்கே. 6. வெறி செறித்தனனே வேலன் கறிய கல் முகை வயப் புலி கழங்கு மெய்ப் படூஉ புன்பலம் வித்திய புனவர் புணர்த்த மெய்ம்மையன்ன பெண்பாற் புணர்ந்து மன்றில் பையுள் தீரும் குன்ற நாடன் உறீஇய நோயே. 7. அன்னை தந்தது ஆகுவது அறிவென் பொன் நகர் வரைப்பின் கன்னம் தூக்கி முருகு என மொழியும் ஆயின் அரு வரை நாடன் பெயர் கொலோ அதுவே. 8. பெய்ம் மணல் முற்றம் கவின் பெற இயற்றி மலைவான் கொண்ட சினைஇய வேலன் கழங்கினால் அறிகுவது என்றால் நன்றால் அம்ம நின்ற இவள் நலனே. 9. பெய்ம் மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு முருகு என மொழியும் வேலன் மற்றவன் வாழிய இலங்கும் அருவிச் சூர் மலை நாடனை அறியாதோனே. 50. பொய் படு அறியாக் கழங்கே மெய்யே மணி வரைக் கட்சி மட மயில் ஆலும் நம் மலர்ந்த வள்ளியம் கானம் கிழவோன் ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள் பூண் தாங்கு இள முலை அணங்கியோனே. 1. குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி நுண் பல் அழி துளி பொழியும் நாட நெடு வரைப் படப்பை நும் ஊர்க் கடு வரல் அருவி காணினும் அழுமே. 2. குன்றக் குறவன் புல் வேய்க் குரம்பை மன்றாடு இள மழை மறைக்கும் நாடன் புரையோன் வாழி தோழி விரை பெயல் அரும் பனி அளைஇய கூதிர்ப் பெருந்தண் வாடையின் முந்து வந்தனனே. 3. குன்றக் குறவன் சாந்த நறும் புகை தேங்கமழ் சிலம்பின் வரையகம் கமழும் கானக நாடன் வரையின் மன்றலும் உடையள் கொல் தோழி யாயே? 4. குன்றக் குறவன் ஆரம் அறுத்தென நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும் வண்டு இமிர் சுடர் நுதல் குறுமகள் கொண்டனர் செல்வர் தம் குன்று கெழு நாட்டே. 5. குன்றக் குறவன் காதல் மட மகள் வரையர மகளிர்ப் புரையும் சாயலள் ஐயள் அரும்பிய முலையள் செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே. 6. குன்றக் குறவன் காதல் மடமகள் வண்டு படு கூந்தல் தண் தழைக் கொடிச்சி வளையள் முளை வாள் எயிற்றள் இளையள் ஆயினும் ஆர் அணங்கினளே. 7. குன்றக் குறவன் கடவுள் பேணி இரந்தனன் பெற்ற எல் வளைக் குறுமகள் ஆய் அரி நெடுங்கண் கலிழச் சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே. 8. குன்றக் குறுவன் காதல் மடமகள் அணி மயில் அன்ன அசை நடைக் கொடிச்சியைப் பெரு வரை நாடன் வரையும் ஆயின் கொடுத்தனெம் ஆயினோம் நன்றே இன்னும் ஆனாது நன்னுதல் துயரே. 9. குன்றக் குறவன் காதல் மடமகள் மன்ற வேங்கை மலர் சில கொண்டு மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தித் தேம் பலிச் செய்த ஈர் நறும் கையள் மலர்ந்த காந்தள் நாறிக் கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே. 60. குன்றக் குறவன் காதல் மடமகள் மெந்தோள் கொடிச்சியைப் பெறற்கு அரிது தில்ல பைம்புறப் படு கிளி ஓப்பலர் புன்புல மயக்கத்து விளைந்தன தினையே. 1. மென்தினை மேய்ந்த தறுகண் பன்றி வன் கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன் எந்தை அறிதல் அஞ்சிக் கொல்? அதுவே மன்ற வாராமையே. 2. சிறு தினை மேய்ந்த தறுகண் பன்றி துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும் இலங்கு மலை நாடன் வரூஉம் மருந்தும் அறியும் கொல் தோழி அவன் விருப்பே. 3. நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல் கட்டளை அன்ன கேழல் மாந்தும் குன்று கெழு நாடன் தானும் வந்தனன் வந்தன்று தோழி என் நலனே. 4. இளம் பிறையன்ன கோட்ட கேழல் களங்கனியன்ன பெண்பால் புணரும் அயம் திகழ் சிலம்ப கண்டிகும் பயந்தன மாதோ நீ நயந்தோள் கண்ணே. 5. புலி கொல் பெண்பால் பூ வரிக் குருளை வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் குன்று கெழு நாடன் மறந்தனன் பொன் போல் புதல்வனோடு என் நீத்தோனே. 6. சிறு கண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு குறுங்கை இரும் புலி பொரூஉம் நாட நனி நாண் உடைய மன்ற பனிப் பயந்தன நீ நயந்தோள் கண்ணே. 7. சிறு கண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல் துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி ஐவனம் கவரும் குன்ற நாடன் வண்டு படு கூந்தலைப் பேணிப் பண்பு இல சொல்லும் தேறுதல் செத்தே. 8. தாஅ இழந்த தழு வரிக் குருளையொடு வள மலைச் சிறு தினை உணீஇய கானவர் வரை ஓங்கு உயர் சிமைக் கேழல் உறங்கும் நன் மலை நாடன் பிரிதல் என் பயக்கும்மோ நம் விட்டுத் துறந்தே. 9. கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை விளைந்த செறுவில் தோன்றும் நாடன் வாராது அவண் உறை நீடின் நேர் வளை இணை ஈர் ஓதி நீ அழத் துணை நனி இழக்குவென் மடமை யானே. 70. கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில் தலை விளை கானவர் கொய்தனர் பெயரும் புல்லென் குன்றத்துப் புலம்பு கொள் நெடு வரை காணினும் கலிழு நோய் செத்துத் தாம் வந்தனர் நம் காதலோரே. 1. அவரை அருந்த மந்தி பகர்வர் பக்கின் தோன்றும் நாடன் வேண்டின் பல் பசுப் பெண்டிரும் பெறுகுவன் தொல் கேள் ஆகலின் நல்குமால் இவட்கே. 2. கரு விரல் மந்திக் கல்லா வன் பறழ் அரு வரைத் தீந்தேன் எடுப்பி அயலது உருகெழு நெடுஞ் சினைப் பாயும் நாடன் இரவின் வருதல் அறியான் வரும் வரும் என்பள் தோழி யாயே. 3. அத்தச் செயலைத் துப்பு உறழ் ஒண் தளிர் புன்தலை மந்தி வன் பறழ் ஆரும் நன் மலை நாட நீ செலின் நின் நயத்து உறைவி என்னினும் கலிழ்மே. 4. மந்திக் கணவன் கல்லாக் கடுவன் ஒண் கேழ் வயப் புலி குழுமலின் விரைந்து உடன் குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன் சென்றனன் வாழி தோழி என் மென் தோள் கவினும் பாயலும் கொண்டே. 5. குரங்கின் தலைவன் குரூஉ மயிர்க் கடுவன் சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை மாரி மொக்குள் புடைக்கும் நாட யாம் நின் நயந்தனம் எனினும் எம் ஆய் நலம் வாடுமோ அருளுதி எனினே. 6. மந்திக் காதலன் முறி மேய் கடுவன் தண் கமழ் நறைக் கொடி கொண்டு வியல் அறைப் பொங்கல் இள மழை புடைக்கும் நாட நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ கன் முகை வேங்கை மலரும் நன் மலை நாடன் பெண்டு எனப்படுத்தே. 7. குறவர் முன்றில் மா தீண்டு துறுகல் கல்லா மந்தி கடுவனோடு உகளும் குன்ற நாட நின் மொழிவல் என்றும் பயப்ப நீத்தல் என் இவள் கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே. 8. சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல் குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன் உற்றோர் மறவா நோய் தந்து கண்டோர் தண்டா நலம் கொண்டனனே. 9. கல் இவர் இற்றி புல்லுவன ஏறிக் குளவி மேய்ந்த மந்தி துணையோடு வரை மிசை உகளும் நாட நீ வரின் கல் அகத்தது எம் ஊரே அம்பல் சேரி அலர் ஆங்கட்டே. 80. கரு விரல் மந்திக் கல்லா வன் பார்ப்பு இரு வெதிர் ஈர்ங்கழை ஏறிச் சிறு கோல் மதி புடைப்பது போல தோன்றும் நாட வரைந்தனை நீ எனக் கேட்டு யான் உரைத்தனென் அல்லனோ அஃது என் யாய்க்கே. 1. வெள்ள வரம்பின் ஊழி போகியும் கிள்ளை வாழிய பலவே ஒள் இழை இரும்பல் கூந்தல் கொடிச்சி பெருந்தோள் காவல் காட்டியவ்வே. 2. சாரல் புறத்த பெருங்குரல் சிறு தினைப் பேரமர் மழைக்கண் கொடிச்சி கடியவும் சோலைச் சிறு கிளி உன்னும் நாட ஆர் இருள் பெருகின வாரல் கோட்டு மா வழங்கும் காட்டக நெறியே. 3. வன்கண் கானவன் மென் சொல் மடமகள் புன்புல மயக்கத்து உழுத ஏனல் பைம்புறச் சிறு கிளி கடியும் நாட பெரிய கூறி நீப்பினும் பொய் வலைப் படூஉம் பெண்டு தவப் பலவே. 4. அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால் இருவை நீள் புனம் கண்டும் பிரிதல் தேற்றாப் பேரன் பினவே. 5. பின் இருங்கூந்தல் நல் நுதல் குறமகள் மெல் தினை நுவணை உண்டு தட்டையின் ஐவனச் சிறு கிளி கடியும் நாட வீங்கு வளை நெகிழப் பிரிதல் யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே? 6. சிறுதினை கொய்த இருவை வெண்கால் காய்த்த அவரைப் படு கிளி கடியும் யாணர் ஆகிய நன் மலை நாடன் புகர் இன்று நயந்தனன் போலும் கவரும் தோழி என் மாமைக் கவினே. 7. நெடு வரை மிசையது குறுங்கால் வருடை தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட வல்லை மன்ற பொய்த்தல் வல்லாய் மன்ற நீ அல்லது செயலே. 8. நன்றே செய்த உதவி நன்று தெரிந்து யாம் எவன் செய்குவம் நெஞ்சே காமர் மெல்லியல் கொடிச்சி காப்பப் பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே. 9. கொடிச்சி இன் குரல் கிளி செத்து அடுக்கத்துப் பைங்குரல் ஏனல் படர்தரும் கிளியெனக் காவலும் கடியுநர் போல்வர் மால் வரை நாட வரைந்தனை கொண்மோ. 90. அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய பூக் கமழ் கூந்தல் கொடிச்சி நோக்கவும் படும் அவள் ஓப்பவும் படுமே. 1. மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் துறு கல் அடுக்கத்து அதுவே பணைத்தோள் ஆய் தழை நுடங்கும் அல்குல் காதலி உறையும் நனி நல்லூரே. 2. மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிரத் தண் மழை தழீஇய மா மலை நாட நின்னினும் சிறந்தனள் எமக்கே நீ நயந்து நன் மனை அருங்கடி அயர எம் நலம் சிறப்ப யாம் இனிப் பெற்றோளே. 3. சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை அன்ன நலம் பெறு கையின் என் கண் புதைத்தோயே பாயல் இந்துணை ஆகிய பணைத்தோள் தோகை மாட்சிய மடந்தை நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே. 4. எரி மருள் வேங்கை இருந்த தோகை இழை அணி மடந்தையின் தோன்றும் நாட இனிது செய்தனையால் நுந்தை வாழியர் நன் மனை வதுவை அயர இவள் பின்னிருங் கூந்தல் மலர் அணிந்தோயே. 5. வருவது கொல்லோ தானே வாராது அவண் உறை மேவலின் அமைவது கொல்லோ புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை இருவி இருந்த குருவி வருந்துறப் பந்து ஆடு மகளிரின் படர்தரும் குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே? 6. கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல் அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட நடுநாள் கங்குலும் வருதி கடுமா தாக்கின் அறியேன் யானே. 7. விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை பூக்கொய் மகளிரின் தோன்றும் நாட பிரியினும் பிரிவது அன்றே நின்னொடு மேய மடந்தை நட்பே. 8. மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும் அடுக்கல் நல்லூர் அசை நடைக் கொடிச்சி தான் எம் அருளாள் ஆயினும் யாம் தன் உள்ளுபு மறந்தறி யேமே. 9. குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன் பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும் அம் சில் ஓதி அசை நடைக் கொடிச்சி கண் போல் மலர்தலும் அரிது இவள் தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே. 300. கொடிச்சி கூந்தல் போலத் தோகை அம் சிறை விரிக்கும் பெருங்கல் வெற்பன் வந்தனன் எதிர்ந்தனர் கொடையே அம் தீம் கிளவி பொலிக நின் சிறப்பே. ***

ain2:

Oct. 12th, 2017 01:50 am
1. அன்னை வாழி வேண்டு அன்னை உதுக்காண் ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு நெய்தல் மயக்கி வந்தன்று நின் மகள் பூப் போல் உண்கண் மரீஇய நோய்க்கு மருந்தாகிய கொண்கன் தேரே. 2. அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர் நீல் நிறப் பெருங்கடல் புள்ளின் ஆனாது துன்புறு துயரம் நீங்க இன்புற இசைக்கும் அவர் தேர் மணிக் குரலே. 3. அன்னை வாழி வேண்டு அன்னை புன்னையொடு ஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன் இவட்கு அமைந்தனெனால் தானே தனக்கு அமைந்தன்று இவள் மாமைக் கவினே. 4. அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர்ப் பலர் மடி பொழுதின் நலம் மிகச் சாஅய் நள்ளென வந்த இயல் தேர்ச் செல்வக் கொண்கன் செல்வன் அஃது ஊரே. 5. அன்னை வாழி வேண்டு அன்னை முழங்கு கடல் திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும் தண்ணந் துறைவன் வந்தெனப் பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நுதலே. 6. அன்னை வாழி வேண்டு அன்னை அவர் நாட்டுத் துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் தன் கடல் வளையினும் இலங்கும் இவள் அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே. 7. அன்னை வாழி வேண்டு அன்னை என் தோழி சுடர் நுதல் பசப்பச் சாஅய்ப் படர் மெலிந்து தண் கடல் படு திரை கேட்டொறும் துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே. 8. அன்னை வாழி வேண்டு அன்னை கழிய முண்டக மலரும் தண் கடல் சேர்ப்பன் எந் தோள் துறந்தனன் ஆயின் எவன் கொல் மற்று அவன் நயந்த தோளே. 9. அன்னை வாழி வேண்டு அன்னை நெய்தல் நீர் படர் தூம்பின் பூக் கெழு துறைவன் எந் தோள் துறந்த காலை எவன் கொல் பன்னாள் வரும் அவன் அளித்த பொழுதே. 10. அன்னை வாழி வேண்டு அன்னை புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை என்னை என்றும் யாமே இவ்வூர் பிறிது ஒன்றாகக் கூறும் ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே. 1. அம்ம வாழி தோழி பாணன் சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை பிரிந்தும் வாழ்துமோ நாமே அருந் தவம் முயறல் ஆற்றாதேமே. 2. அம்ம வாழி தோழி பாசிலைச் செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன் தான் வரக் காண்குவம் நாமே மறந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே. 3. அம்ம வாழி தோழி நென்னல் ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு ஊரார் பெண்டென மொழிய என்னை அது கேட்ட அன்னாய் என்றனள் அன்னை பைபய எம்மை என்றனென் யானே. 4. அம்ம வாழி தோழி கொண்கன் நேரேம் ஆயினும் செல்குவம் கொல்லோ கடலின் நாரை இரற்றும் மடலம் பெண்ணை அவனுடை நாட்டே. 5. அம்ம வாழி தோழி பன் மாண் நுண் மணல் அடை கரை நம்மோடு ஆடிய தண்ணந் துறைவன் மறைஇ அன்னை அருங்கடி வந்து நின்றோனே. 6. அம்ம வாழி தோழி நாம் அழ நீல இருங்கழி நீலம் கூம்பு மாலை வந்தன்று மன்ற காலையன்ன காலை முந்து உறுத்தே. 7. அம்ம வாழி தோழி நலனே இன்னது ஆகுதல் கொடிதே புன்னை அணி மலர் துறை தொறும் வரிக்கும் மணி நீர்ச் சேர்ப்பனை மறவாதோர்க்கே. 8. அம்ம வாழி தோழி யான் இன்று அறன் இலாளன் கண்ட பொழுதில் சினவுவென் தகைக்குவென் சென்றனென் பின் நினைந்து இரங்கிப் பெயர்தந்தேனே. 9. அம்ம வாழி தோழி நன்றும் எய்யாமையின் ஏதில பற்றி அன்பிலன் மன்ற பெரிதே மென் புலக் கொண்கன் வாராதோனே. 20. அம்ம வாழி தோழி நல மிக நல்ல ஆயின அளிய மென் தோளே மல்லல் இருங்கழி நீர் அறல் விரியும் மெல்லம் புலம்பன் வந்த மாறே. 1. கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே முண்டகக் கோதை நனையத் தெண் திரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே. 2. கண்டகும் அல்லமோ கொண்க நின் கேளே ஒள் இழை உயர் மணல் வீழ்ந்தென வெள்ளாங்குருகை வினைவுவோளே. 3. கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத் தண்ணென் பெருங்கடல் திரை பாய்வோளே. 4. கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே வண்டல் பாவை வெளவலின் நுண் பொடி அளைஇக் கடல் தூர்ப்போளே. 5. கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே தெண் திரை பாவை வெளவ உண்கண் சிவப்ப அழுது நின்றோளே. 6. கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே உண்கண் வண்டினம் மொய்ப்பத் தெண் கடல் பெருந்திரை மூழ்குவோளே. 7. கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே தும்பை மாலை இளமுலை நுண் பூண் ஆகம் விலங்குவோளே. 8. கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே உறாஅ வறு முலை மடாஅ உண்ணாப் பாவையை ஊட்டுவோளே. 1. நன்றே பாண கொண்கனது நட்பே தில்லை வேலி இவ்வூர்க் கல்லென் கௌவை எழாஅக் காலே. 2. அம்ம வாழி பாண புன்னை அரும்பு மலி கானல் இவ்வூர் அலர் ஆகின்று அவர் அருளுமாறே. 3. யானெவன் செய்கோ பாண ஆனாது மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் புல்லென்றன என் புரி வளைத் தோளே. 4. காண்மதி பாண இருங்கழிப் பாய் பரி நெடுந் தேர்க் கொண்கனொடு தான் வந்தன்று என் மாமைக் கவினே. 5. பைதலம் அல்லேம் பாண பணைத்தோள் ஐது அமைந்து அகன்ற அல்குல் நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே. 6. நாணிலை மன்ற பாண நீயே கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த கானலம் துறைவற்குச் சொல் உகுப்போயே. 7. நின்னொன்று வினவுவல் பாண நும் ஊர்த் திண் தேர்க் கொண்கனை நயந்தோர் பண்டைத் தம் நலம் பெறுபவோ மற்றே. 8. பண்பிலை மன்ற பாண இவ்வூர் அன்பில கடிய கழறி மென்புலக் கொண்கனைத் தாராதோயே. 9. அம்ம வாழி கொண்க எம் வயின் மாண் நலம் மருட்டும் நின்னினும் பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே. 40. காண்மதி பாண நீ உரைத்தற்கு உரியை துறை கெழு கொண்கன் பிரிந்தென இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே. 1. எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத் துவலைத் தண் துளி வீசிப் பயலை செய்தன பனி படு துறையே. 2. எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படு சினைப் புள் இறை கூரும் துறைவனை உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே. 3. எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை இனிய செய்த நின்று பின் முனிவு செய்த இவள் தட மென் தோளே. 4. எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்த் தனிக்குருகு உறங்கும் துறைவற்கு இனிப் பசந்தன்று என் மாமைக் கவினே. 5. எக்கர் ஞாழல் சிறி இலைப் பெருஞ்சினை ஓதம் வாங்கும் துறைவன் மாயோள் பசலை நீக்கினன் இனியே. 6. எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர் நறிய கமழும் துறைவற்கு இனிய மன்ற என் மாமைக் கவினே. 7. எக்கர் ஞாழல் மலரின் மகளிர் ஒண் தழை அயரும் துறைவன் தண் தழை விலையென நல்கினன் நாடே. 8. எக்கர் ஞாழல் இகந்து படு பெருஞ்சினை வீ இனிது கமழும் துறைவனை நீ இனிது முயங்குதி காதலோயே. 9. எக்கர் ஞாழல் பூவின் அன்ன சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு அணங்கு வளர்த்து அகறல் வல்லா தீமோ. 50. எக்கர் ஞாழல் நறு மலர்ப் பெருஞ்சினைப் புணரி திளைக்கும் துறைவன் புணர்வின் இன்னான் அரும் புணர்வினனே. 1. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை மிதிப்ப நக்க கண் போல் நெய்தல் கள் கமழ்ந்து ஆனாத் துறைவற்கு நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே. 2. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை கையறுபு இரற்றும் கானலம் புலம்பந் துறைவன் வரையும் என்ப அறவன் போலும் அருளுமார் அதுவே. 3. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை உளர ஒழிந்த தூவி குலவு மணல் போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை நன்னெடுங் கூந்தல் நாடுமோ மற்றே. 4. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை கானல் சேக்கும் துறைவனோடு யானெவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே. 5. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய ஓதமொடு பெயரும் துறைவதற்குப் பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே. 6. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி தெள் கழிப் பரக்கும் துறைவன் எனக்கோ காதலன் அனைக்கோ வேறே. 7. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை காலையிருந்து மாலைச் சேக்கும் தெண் கடல் சேர்ப்பனொடு வாரான் தான் வந்தனன் எம் காதலோனே. 8. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும் தண்ணந் துறைவன் கண்டிகும் அம் மா மேனி எம் தோழியது துயரே. 9. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை பசி தின அல்கும் பனி நீர்ச் சேர்ப்ப நின் ஒன்று இரக்குவென் அல்லேன் தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே. 60. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ பண்டையின் மிகப் பெரிது இனைஇ முயங்குமதி பெரும மயங்கினள் பெரிதே. 1. பெருங்கடல் கரையது சிறு வெண் காக்கை கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப் பசந்து நுதல் அழியச் சாஅய் நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே. 2. பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை நீத்து நீர் இருங்கழி இரை தேர்ந்து உண்டு பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவன் சொல்லோ பிற ஆயினவே. 3. பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும் துறைவன் துறந்தெனத் துறந்து என் இறை ஏர் முன் கை நீக்கிய வளையே. 4. பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை இருங்கழி மருங்கின் அயிரை ஆரும் தண்ணந் துறைவன் தகுதி நம்மோடு அமையாது அலர் பயந்தன்றே. 5. பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை அறுகழிச் சிறு மீன் ஆர மாந்தும் துறைவன் சொல்லிய சொல் என் இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே. 6. பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம் மெல்லம் புலம்பன் தேறி நல்ல வாயின நல்லோள் கண்ணே. 7. பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை இருங்கழி இனக் கெடிறு ஆரும் துறைவன் நல்குவன் போலக் கூறி நல்கான் ஆயினும் தொல் கேள் என்னே. 8. பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை துறை படி அம்பி அக மனை ஈனும் தண்ணந் துறைவன் நல்கின் ஒண்ணுதல் அரிவை பால் ஆரும்மே. 9. பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை பொன் இணர் ஞாழல் முனையின் பொதி அவிழ் புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன் நெஞ்சத்து உண்மை அறிந்தும் என் செயப் பசக்கும் தோழி என் கண்ணே. 70. பெருங்கடல் கரையது சிறு வெண் காக்கை இருங்கழி நெய்தல் சிதைக்கும் துறைவன் நல்லன் என்றி யாயின் பல் இதழ் உண்கண் பசத்தல் மற்றெவனோ. 1. திரை இமிழ் இன்னிசை அளைஇ அயலது முழவு இமிழ் இன்னிசை மறுகு தொறு இசைக்கும் தொண்டி அன்ன பணைத்தோள் ஒண் தொடி அரிவை என் நெஞ்சு கொண்டோளே. 2. ஒண் தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண் உரவுக் கடல் ஒலித் திரையென இரவினானும் துயில் அறியேனே. 3. இரவினானும் இன்துயில் அறியாது அரவுறு துயரம் எய்துப தொண்டித் தண் நறு நெய்தல் நாறும் பின் இருங்கூந்தல் அணங்குற்றோரே. 4. அணங்குடைப் பனித் துறைத் தொண்டி அன்ன மணங்கமழ் பொழில் குறி நல்கினள் நுணங்கு இழை பொங்கு அரி பரந்த உண்கண் அம் கலிழ் மேனி அசைஇய எமக்கே. 5. எமக்கு நயந்து அருளினை யாயின் பணைத்தோள் நல் நுதல் அரிவையொடு மென் மெல இயலி வந்திசின் வாழியா மடந்தை தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே. 6. பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித் தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி ஐது அமைந்து அகன்ற அல்குல் கொய் தளிர் மேனி கூறுமதி தவறே. 7. தவறு இலர் ஆயினும் பனிப்ப மன்ற இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடுங்கோட்டு முண்டக நறு மலர் கமழும் தொண்டி அன்னோள் தோள் உற்றோரே. 8. தோளும் கூந்தலும் பல பாராட்டி வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல் குட்டுவன் தொண்டி அன்ன என் கண்டும் நயந்து நீ நல்காகக் காலே. 9. நல்குமதி வாழியோ நளி நீர்ச் சேர்ப்ப அலவன் தாக்கத் துறை இறாப் பிறழும் இன் ஒலித் தொண்டி அற்றே நின்னலது இல்லா இவள் சிறு நுதலே. 80. சிறு நனி வரைந்தனை கொண்மோ பெரு நீர் வலைவர் தந்த கொழு மீன் வல்சிப் பறை தபு முது குருகு இருக்கும் துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே. 1. நெய்தல் உண்கண் நேர் இறைப் பணைத்தோள் பொய்தல் ஆடிய பொய்யா மகளிர் குப்பை வெண் மணல் குரவை நிறூஉம் துறை கெழு கொண்கன் நல்கின் உறைவு இனிது அம்ம இவ் அழுங்கல் ஊரே. 2. நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇக் கை புனை நறுந்தார் கமழும் மார்பன் அருந்திறல் கடவுள் அல்லன் பெருந்துறைக் கண்டு இவள் அணங்கியோனே. 3. தண் கடல் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையின் கடும் பகல் வருதி கையறு மாலை கொடுங்கழி நெய்தலும் கூம்பக் காலை வரினும் களைஞரோ இலரே. 4. நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி மீன் உண் குருகு இனம் கானல் அல்கும் கடல் அணிந்தன்று அவர் ஊரே கடலினும் பெரிது எமக்கு அவருடை நட்பே. 5. அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய் அரம் போழ் அவ்வளைக் குறுமகள் நரம்பு ஆர்த்தன்ன தீம் கிளவியளே. 6. நாரை நல் இனம் கடுப்ப மகளிர் நீர் வார் கூந்தல் உளரும் துறைவ பொங்கு கழி நெய்தல் உறைப்ப இத்துறைப் பல் கால் வரூஉம் தேரெனச் செல்லாதீமோ என்றனள் யாயே. 7. நொதுமலாளர் கொள்ளார் இவையே எம்மொடு வந்து கடலாடு மகளிரும் நெய்தல் அம் பகைத்தழைப் பாவை புனையார் உடலகம் கொள்வோர் இன்மையின் தொடலைக்கு உற்ற சில பூவினரே. 8. இருங்கழிச் சேயிறா இனப்புள் ஆரும் கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை வைகறை மலரும் நெய்தல் போலத் தகை பெரிது உடை காதலி கண்ணே. 9. புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல் பொன் படு மணியில் பொற்பத் தோன்றும் மெல்லம் புலம்பன் வந்தென நல்லன வாயின தோழி என் கண்ணே. 90. தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும் மெல்லம் புலம்பன் மன்ற எம் பல் இதழ் உண்கண் பனி செய்தோனே. 1. கடல் கோடு செறிந்த வளை வார் முன் கைக் கழிப்பூத் தொடர்ந்த இரும் பல் கூந்தல் கானல் ஞாழல் கவின் பெறு தழையள் வரையர மகளிரின் அரியள் என் நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. 2. கோடு புலம் கொட்பக் கடல் எழுந்து முழுங்கப் பாடு இமிழ் பனித்துறையோடு கலம் உகைக்கும் துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன வீங்கின மாதோ தோழி என் வளையே. 3. வலம்புரி உழுத வார் மணல் அடை கரை இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும் துறை கெழு கொண்க நீ தந்த அறை புனல் வால் வளை நல்லவோ தாமே. 4. கடல் கோடு அறுத்த அரம் போழ் அவ்வளை ஒண் தொடி மடவரல் கண்டிகும் கொண்க நன் நுதல் இன்று மால் செய்தெனக் கொன் ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே. 5. வளை படு முத்தம் பரதவர் பகருங் கடல் கெழு கொண்கன் காதல் மட மகள் கெடல் அருந் துயரம் நல்கிப் படலின் பாயல் வெளவியோளே. 6. கோடு ஈர் எல் வளைக் கொழும் பல் கூந்தல் ஆய் தொடி மட வரல் வேண்டுதி ஆயின் தெண் கழி சேயிறாப் படூஉம் தண் கடல் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ. 7. இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி முகம் புதை கதுப்பினள் இறைஞ்சி நின்றோளே புலம்பு கொள் மாலை மறைய நலங் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே. 8. வளையணி முன் கை வால் எயிற்று அமர் நகை இளையர் ஆடும் தளை அவிழ் கானல் குறுந்துறை வினவி நின்ற நெடுந் தோள் அண்ணல் கண்டிக்கும் யாமே. 9. கானலம் பெருந்துறைக் கலி திரை திளைக்கும் வான் உயர் நெடு மணல் ஏறி ஆனாது காண்கம் வம்மோ தோழி செறி வளை நெகிழ்த்தோன் எறி கடல் நாடே. 200. இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவினப் பொலந் தேர்க் கொண்கன் வந்தனன் இனியே விலங்கு அரி நெடுங்கண் ஞெகிழ்மதி நலம் கவர் பசலையை நகுகம் நாமே. **

ain1:

Oct. 12th, 2017 01:46 am
1. வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்டோளே யாயே யாமே நனைய காஞ்சிச் சினைய சிறு மீன் யாணர் ஊரன் வாழ்க பாணனும் வாழ்க என வேட்டேமே. 2. வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வருக இரவலர் என வேட்டோளே யாயே யாமே பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் தண் துறை ஊரன் கேண்மை வழி வழிச் சிறக்க என வேட்டேமே. 3. வாழி ஆதன் வாழி அவினி பால் பல ஊறுக பகடு பல சிறக்க என வேட்டோளே யாயே யாமே வித்திய உழவர் நெல்லொடு பெயரும் பூக்கஞல் ஊரன் தன் மனை வாழ்க்கை பொலிக என வேட்டேமே. 4. வாழி ஆதன் வாழி அவினி பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக என வேட்டோளே யாயே யாமே பூத்த கரும்பின் காய்த்த நெல்லின் கழனி ஊரன் மார்பு பழனம் ஆகற்க என வேட்டேமே. 5. வாழி ஆதன் வாழி அவினி பசியில் ஆகுக பிணி சேண் நீங்குக என வேட்டோளே யாயே யாமே முதலை போத்து முழு மீன் ஆரும் தண் துறை ஊரன் தேர் எம் முன் கடை நிற்க என வேட்டேமே. 6. வாழி ஆதன் வாழி அவினி வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக என வேட்டோளே யாயே யாமே மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண் துறை ஊரன் வரைக எந்தையும் கொடுக்க என வேட்டேமே. 7. வாழி ஆதன் வாழி அவினி அறன் நனி சிறக்க அல்லது கெடுக என வேட்டோளே யாயே யாமே உளைப்பூ மருதத்துக் கிளைக் குருகு இருக்கும் தண் துறை ஊரன் தன்னூர்க் கொண்டனன் செல்க என வேட்டேமே. 8. வாழி ஆதன் வாழி அவினி அரசு முறை செய்க களவு இல் ஆகுக என வேட்டோளே யாயே யாமே அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும் பூக் கஞல் ஊரன் சூள் இவண் வாய்ப்பதாக என வேட்டோமே. 9. வாழி ஆதன் வாழி அவினி நன்று பெரிது சிறக்க தீது இல் ஆகுக என வேட்டோளே யாயே யாமே கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் தண் துறை ஊரன் கேண்மை அம்பல் ஆகற்க என வேட்டேமே. 10. வாழி ஆதன் வாழி அவினி மாரி வாய்க்க வளம் நனி சிறக்க என வேட்டோளே யாயே யாமே பூத்த மாஅத்துப் புலால் அம் சிறுமீன் தண் துறை ஊரன் தன்னொடு கொண்டனன் செல்க என வேட்டேமே. 1. மனை நடு வயலை வேழம் சுற்றும் துறை கேழ் ஊரன் கொடுமை நாணி நல்லன் என்றும் யாமே அல்லன் என்னும் என் தட மென்தோளே. 2. கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும் துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும் ஆற்றுக தில்ல யாமே தோற்க தில்ல என் தட மென் தோளே. 3. பரியுடை நன்மான் பொங்கு உளையன்ன வட கரை வேழம் வெண் பூப் பகரும் தண் துறை ஊரண் பெண்டிர் துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே. 4. கொடிப் பூ வேழம் தீண்டி அயல வடுக்கொண் மாஅத்து வண் தளிர் நுடங்கும் அணித்துறை ஊரன் மார்பே பனித் துயில் செய்யும் இன் சாயற்றே. 5. மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழைப் புனல் ஆடு மகளிர்க்குப் புணர் துணை உதவும் வேழ மூதூர் ஊரன் ஊரன் ஆயினும் ஊரன் அல்லன்னே. 6. ஓங்கு பூ வேழத்துத் தூம்பு உடைத் திரள் கால் சிறு தொழு மகளிர் அஞ்சனம் பெய்யும் பூக்கஞல் ஊரனை யுள்ளிப் பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே. 7. புதர் மிசை நுடங்கும் வேழ வெண் பூ விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன் புதுவோர் மேவலன் ஆகலின் வறிதாகின்று என் மடங்கெழு நெஞ்சே. 8. இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம் கரும்பின் அலமரும் கழனி ஊரன் பொருந்தும் மலரன்ன என் கண் அழப் பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே. 9. எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ்சினை புணர்ந்தோர் மெய்ம் மணங் கமழும் தண் பொழில் வேழ வெண் பூ வெள்ளுகை சீக்கும் ஊரன் ஆகலின் கலங்கி மாரி மலரின் கண் பனி உகுமே. 20. அறுசில் கால அஞ்சிறைத் தும்பி நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும் காம்பு கண்டன்ன தூம்பு உடை வேழத்துத் துறை நணி ஊரனை உள்ளியென் இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே. 1. முள்ளி நீடிய முது நீர் அடை கரைப் புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும் தண் துறை ஊரன் தெளிப்பவும் உண்கண் பசப்பது எவன் கொல் அன்னாய். 2. அள்ளல் ஆடிய புள்ளிக் களவன் முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன் நல்ல சொல்லி மணந்து இனி நீயேன் என்றது எவன் கொல் அன்னாய். 3. முள்ளி வேர் அளைக் களவன் ஆட்டிப் பூக்குற்று எய்திய புனல் அணி ஊரன் தேற்றம் செய்து நம் புணர்ந்து இனித் தாக்கணங்கு ஆவது எவன் கொல் அன்னாய். 4. தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர் எய்தினன் ஆகின்று கொல்லோ மகிழ்நன் பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர் நலங்கொண்டு துறப்பது எவன் கொல் அன்னாய். 5. புயல் புறந்தந்த புனிற்று வளர் பைங்காய் வயலைச் செங்கொடி களவன் அறுக்கும் கழனி ஊரன் மார்பு பலர்க்கு இழை நெகிழ் செல்லல் ஆகும் அன்னாய். 6. கரந்தை அம் செறுவில் துணை துறந்து களவன் வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன் எம்மும் பிறரும் அறியான் இன்னன் ஆவது எவன் கொல் அன்னாய். 7. செந்நெல் அம் செறுவில் கதிர் கொண்டு களவன் தண் அக மண் அளைச் செல்லும் ஊரற்கு எல் வளை நெகிழச் சாஅய் அல்லல் உழப்பது எவன் கொல் அன்னாய். 8. உண் துறை அணங்கிவள் உறை நோய் ஆயின் தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு ஒண் தொடி நெகிழச் சாஅய் மென் தோள் பசப்பது எவன் கொல் அன்னாய். 9. மாரி கடி கொளக் காவலர் கடுக வித்திய வெண் முளை களவன் அறுக்கும் கழனி ஊரன் மார்புற மரீஇத் திதலை அல்குல் நின் மகள் பசலை கொள்வது எவன் கொல் அன்னாய். 30. வேப்பு நனை அன்ன நெடுங்கண் களவன் தண் அக மண் அளை நிறைய நெல்லின் இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள் பெருங் கவின் இழப்பது எவன் கொல் அன்னாய். 1. அம்ம வாழி தோழி மகிழ்நன் கடன் அன்று என்னும் கொல்லோ நம் ஊர் முட முதிர் மருதத்துப் பெருந்துறை உடனாடு ஆயமோடு உற்ற சூளே. 2. அம்ம வாழி தோழி மகிழ்நன் ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள் அழுப என்ப அவன் பெண்டிர் தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே. 3. அம்ம வாழி தோழி மகிழ்நன் மருது உயர்ந்து ஓங்கிய விரி பூம் பெருந்துறைப் பெண்டிரோடு ஆடும் என்ப தன் தண் தார் அகலம் தலைத்தலைக் கொளவே. 4. அம்ம வாழி தோழி நம் ஊர்ப் பொய்கைப் பூத்த புழைக்கால் ஆம்பல் தாது ஏர் வண்ணம் கொண்டன ஏதிலாளற்குப் பசந்த என் கண்ணே. 5. அம்ம வாழி தோழி நம் ஊர்ப் பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் நிறத்தினும் நிழற்றுதல் மன்னே இனிப் பசந்தன்று என் மாமைக் கவினே. 6. அம்ம வாழி தோழி ஊரன் நம் மறந்து அமைகுவன் ஆயின் நாம் மறந்து உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே கயல் எனக் கருதிய உண்கண் பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே. 7. அம்ம வாழி தோழி மகிழ்நன் நயந்தோர் உண்கண் பசந்து பனி மல்க வல்லன் வல்லன் பொய்த்தல் தேற்றான் உற்ற சூள் வாய்த்தல்லே. 8. அம்ம வாழி தோழி மகிழ்நன் தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும் தண் தளிர் வெளவும் மேனி ஒண் தொடி முன் கை யாம் அழப் பிரிந்தே. 9. அம்ம வாழி தோழி ஊரன் வெம் முலை அடைய முயங்கி நம் வயின் திருந்திழைப் பணைத்தோள் ஞெகிழப் பிரிந்தனன் ஆயினும் பிரியலன் மன்னே. 40. அம்ம வாழி தோழி மகிழ்நன் ஒண் தொடி முன் கை யாம் அழப் பிரிந்து தன் பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்ப கெண்டை பாய்தர அவிழ்ந்த வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே. 1. தன் பார்ப்புத் தின்னும் அன்பு இல் முதலையொடு வெண் பூம் பொய்கைத்து அவன் ஊர் என்ப அதனால் தன் சொல் உணர்ந்தோர் மேனி பொன் போல் செய்யும் ஊர் கிழவோனே. 2. மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ யாணர் ஊர நின் மாண் இழை அரிவை காவிரி மலிர் நிறை அன்ன நின் மார்பு நனி விலக்கல் தொடங்கியோளே. 3. அம்பணத்து அன்ன யாமை ஏறிச் செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும் யாணர் ஊர நின்னினும் பாணன் பொய்யன் பல் சூளினனே. 4. தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்புத் தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆஅங்கு அதுவே ஐய நின் மார்பே அறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே. 5. கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும் யாறு அணிந்தன்று நின் ஊரே பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே. 6. நினக்கே அன்று அஃது எமக்குமார் இனிதே நின் மார்பு நயந்த நன் நுதல் அரிவை வேண்டிய குறிப்பினை ஆகி ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லே. 7. முள் எயிற்றுப் பாண் மகள் இன் கெடிறு சொரிந்த அகன் பெரு வட்டி நிறைய மனையோள் அரி கால் பெரும் பயறு நிறைக்கும் ஊர மாண் இழை ஆயம் அறியும் நின் பாணன் போலப் பல பொய்த்தல்லே. 8. வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள் யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர வேண்டேம் பெரும நின் பரத்தை யாண்டுச் செய் குறியோடு ஈண்டு நீ வரலே. 9. அம் சில் ஓதி அசை நடைப் பாண் மகள் சில் மீன் சொரிந்து பல் நெல் பெறூஉம் யாணர் ஊர நின் பாண் மகன் யார் நலம் சிதயப் பொய்க்குமோ இனியே. 50. துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும் வஞ்சி ஓங்கிய யாணர் ஊர தஞ்சம் அருளாய் நீயே நின் நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே. 1. நீர் உறை கோழி நீலச் சேவல் கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர புளிங்காய் வேட்கைத்து அன்று நின் மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே. 2. வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச் செவ்விரல் சிவந்த சேய் அரி மழைக்கண் செவ்வாய்க் குறுமகள் இனைய எவ்வாய் முன்னின்று மகிழ்ந நின் தேரே. 3. துறை எவன் அணங்கும் யாம் உற்ற நோயே சிறை அழி புதுப் புனல் பாய்ந்தெனக் கலங்கிக் கழனித் தாமரை மலரும் பழன ஊர நீ உற்ற சூளே. 4. திண் தேர்த் தென்னவன் நல் நாட்டு உள்ளதை வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ ஊரின் ஊரனை நீ தர வந்த பஞ்சாய்க் கோதை மகளிர்க்கு அஞ்சுவல் அம்ம அம்முறை வரினே. 5. கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள் நல் அணி நயந்து நீ துறத்தலின் பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே. 6. பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா வெல் போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள் நலம் பெறு சுடர் நுதல் தேம்ப எவன் பயம் செய்யும் நீ தேற்றிய மொழியே. 7. பகலின் தோன்றும் பல் கதிர்த் தீயின் ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன இவள் நலம் புலம்பப் பிரிய அனை நலம் உடையளோ மகிழ்ந நின் பெண்டே. 8. விண்டு அன்ன வெண்ணெல் போர்வின் கைவண் விராஅன் இருப்பை அன்ன இவள் அணங்கு உற்றனை போறி பிறர்க்கும் அனையையால் வாழி நீயே. 9. கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்றுற மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர நினக்கு மருந்தாகிய யான் இனி இவட்கு மருந்து அன்மை நோம் என் நெஞ்சே. 60. பழனக் கம்புள் பயிர்ப் பெடை அகவும் கழனி ஊர! நின் மொழிவல் என்றும் துஞ்சு மனை நெடு நகர் வருதி அஞ்சாயோ இவள் தந்தை கை வேலே. 1. நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம்பழம் நெடு நீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம் கைவண் மத்தி கழாஅர் அன்ன நல்லோர் நல்லோர் நாடி வதுவை அயர விரும்புதி நீயே. 2. இந்திர விழவின் பூவின் அன்ன புந்தலைப் பேடை வரி நிழல் அகவும் இவ்வூர் மங்கையர்த் தொகுத்து இனி எவ்வூர் நின்றன்று மகிழ்ந நின் தேரே. 3. பொய்கைப் பள்ளிப் புலவு நாறு நீர் நாய் வாளை நாள் இரை பெறூஉம் ஊர எம் நலம் தொலைவது ஆயினும் துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே. 4. அலமரல் ஆயமோடு அமர் துணை தழீஇ நல மிகு புதுப் புனல் ஆடக் கண்டோர் ஒருவரும் இருவரும் அல்லர் பலரே தெய்ய எம் மறையாதீமே. 5. கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல் சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர புதல்வனை ஈன்ற எம் மேனி முயங்கன்மோ தெய்ய நின் மார்பு சிதைப்பதுவே. 6. உடலினென் அல்லேன் பொய்யாது உரைமோ யார் அவள் மகிழ்ந தானே தேரொடு தளர் நடைப் புதல்வனை உள்ளி நின் வள மனை வருதலும் வெளவியோளே. 7. மடவள் அம்ம நீ இனிக் கொண்டோளே தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெரு நலம் தருக்கும் என்ப விரி மலர்த் தாது உண் வண்டினும் பலரே ஓதி ஒண்ணுதல் பசப்பித்தோரே. 8. கன்னி விடியல் கணைக் கால் ஆம்பல் தாமரை போல மலரும் ஊர பேணாளோ நின் பெண்டே யான் தன் அடங்கவும் தான் அடங்கலளே. 9. கண்டனெம் அல்லமோ மகிழ்ந நின் பெண்டே பலர் ஆடு பெருந்துறை மலரொடு வந்த தண் புனல் வண்டல் உய்த்தென உண்கண் சிவப்ப அழுது நின்றோளே. 70. பழனப் பன் மீன் அருந்த நாரை கழனி மருதின் சென்னிச் சேக்கும் மா நீர்ப் பொய்கை யாணர் ஊர தூயர் நறியர் நின் பெண்டிர் பேஎய் அனையம்யாம் சேய் பயந்தனமே. 1. சூது ஆர் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து நின் வெங்காதலி தழீஇ நெருநை ஆடினை என்ப புனலே அலரே மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே. 2. வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைத் திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் குவளை உண்கண் ஏஎர் மெல்லியல் மலர் ஆர் மலிர் நிறை வந்தெனப் புனலாடு புணர் துணை ஆயினள் எமக்கே. 3. வண்ண ஒண் தழை நுடங்க வால் இழை ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக் கள் நறுங் குவளை நாறித் தண்ணென்றிசினே பெருந்துறைப் புனலே. 4. விசும்பு இழி தோகைச் சீர் போன்றிசினே பசும் பொன் அவிர் இழை பைய நிழற்றக் கரை சேர் மருதம் ஏறிப் பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே. 5. பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால் அலர் தொடங்கின்றால் ஊரே மலர தொன்னிலை மருதத்துப் பெருந்துறை நின்னோடு ஆடினள் தண் புனல் அதுவே. 6. பஞ்சாய்க் கூந்தல் பசு மலர்ச் சுணங்கின் தண் புணல் ஆடித்தல் நலம் மேம்பட்டனள் ஒண் தொடி மடவரல் நின்னோடு அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே. 7. அம்ம வாழியோ மகிழ்ந நின் மொழி வல் பேரூர் அலர் எழ நீரலைக் கலங்கி நின்னொடு தண் புனல் ஆடுதும் எம்மோடு சென்மோ செல்லல் நின் மனையே. 8. கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி மதில் கொல் யானையின் கதழ்பு நெறி வந்த சிறை அழி புதுப் புனல் ஆடுகம் எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புனையே. 9. புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள் யார் மகள் இவளெனப் பற்றிய மகிழ்ந யார் மகள் ஆயினும் அறியாய் நீ யார் மகனை எம் பற்றியோயே. 80. புலக்குவம் அல்லேம் பொய்யாது உரைமோ நலத்தகு மகளிர்க்குத் தோள் துணை ஆகித் தலைப் பெயல் செம் புனல் ஆடித் தவ நனி சிவந்தன மகிழ்ந நின் கண்ணே. 1. குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை அரிப் பறை வினைஞர் அல்கு மிசைக் கூட்டும் மலர் அணி வாயில் பொய்கை ஊர நீ என்னை நயந்தனென் என்ற நின் மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே. 2. வெகுண்டனள் என்ப பாண நின் தலைமகள் மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறும் தார்த் தாது உண் பறவை வந்து எம் போது ஆர் கூந்தல் இருந்தன எனவே. 3. மணந்தனை அருளாய் ஆயினும் பைபையத் தணந்தனை ஆகி உய்ம்மோ நும் ஊர் ஒண் தொடி முன் கை ஆயமும் தண் துறை ஊரன் பெண்டு எனப்படற்கே. 4. செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள் கண்ணிற் காணின் எனாகுவள் கொல் நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண் கயம் போலப் பலர் படிந்து உண்ணு நின் பரத்தை மார்பே. 5. வெண் நுதல் கம்புள் அரிக்குரல் பேடை தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும் மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ சிறுவரின் இனைய செய்தி நகாரோ பெரும நின் கண்டிசினோரே. 6. வெண் தலைக் குருகின் மென் பறை விளிக் குரல் நீள் வயல் நண்ணி இமிழும் ஊர எம் இவண் நல்குதல் அரிது நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே. 7. பகன்றைக் கண்ணிப் பல் ஆன் கோவலர் கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும் யாணர் ஊர நின் மனையோள் யாரையும் புலக்கும் எம்மை மற்று எவனோ? 8. வண் துறை நயவரும் வள மலர்ப் பொய்கைத் தண் துறை ஊரனை எவ்வை எம் வயின் வருதல் வேண்டுதும் என்ப ஒல்லேம் போல் யாம் அது வேண்டுதுமே. 9. அம்ம வாழி பாண எவ்வைக்கு எவன் பெரிது அளிக்கும் என்ப பழனத்து வண்டு தாது ஊதும் ஊரன் பெண்டென விரும்பின்று அவள் தன் பண்பே. 90. மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன கொல் வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான் கொல் அன்னதாகலும் அறியாள் எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே. 1. நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து வெறி மலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும் கழனி ஊரன் மகள் இவள் பழன வெதிரின் கொடிப் பிணையலளே. 2. கருங் கோட்டு எருமைச் செங்கண் புனிற்று ஆக் காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும் நுந்தை நும் ஊர் வருதும் ஒண் தொடி மடந்தை நின்னை யாம் பெறினே. 3. எருமை நல் ஏற்று இனம் மேயல் அருந்தெனப் பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா செய்த இனைய மன்ற பல் பொழில் தாது உண் வெறுக்கைய ஆகி இவள் போது அவிழ் முச்சி ஊதும் வண்டே. 4. மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை மகளிர் அன்ன துணையோடு வதியும் நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே கழனித் தாமரை மலரும் கவின் பெறு சுடர் நுதல் தந்தை ஊரே. 5. கருங்கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ நெடுங்கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் புனல் முற்று ஊரன் பகலும் படர் மலி அரு நோய் செய்தனன் எமக்கே. 6. அணி நடை எருமை ஆடிய அள்ளல் மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் கழனி ஊரன் மகள் இவள் பழன ஊரன் பாயல் இன் துணையே. 7. பகன்றை வான் மலர் மிடைந்த கோட்டைக் கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம் பொய்கை ஊரன் மகள் இவள் பொய்கைப் பூவினும் நறுந் தண்ணியளே. 8. தண் புணல் ஆடும் தடங்கோட்டு எருமை திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர ஒண் தொடி மட மகள் இவளினும் நுந்தையும் யாயும் கடியரோ நின்னே. 9. பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை கழனி எருமை கதிரொடு மயக்கும் பூக் கஞல் ஊரன் மகள் இவள் நோய்க்கு மருந்தாகிய பணைத் தோளோளே. 100. புனல் ஆடு மகளிர் இட்ட ஒள் இழை மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும் யாணர் ஊரன் மகள் இவள் பாணர் நரம்பினும் இன் கிளவியளே. *

Profile

vasconica

April 2020

S M T W T F S
   1 234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Syndicate

RSS Atom

Most Popular Tags

Page Summary

Style Credit

Expand Cut Tags

No cut tags
Page generated Feb. 2nd, 2026 08:12 pm
Powered by Dreamwidth Studios